'வித் லவ்' படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா?
கடந்த ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றியை தமிழ் சினிமாவிற்கு தேடிக்கொடுத்த படம் டூரிஸ்ட் பேமிலி. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். மேலும் அப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் அடுத்து யாரை வைத்து படம் இயக்கப்போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவரே ஹீரோவாக களமிறங்கி அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தார்.

அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் 'வித் லவ்' என்கிற படத்தில் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். இப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

நேற்று இப்படத்தின் டிரைலர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.
முதல் விமர்சனம்
இந்த நிலையில், வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி வெளிவரவிருக்கும் 'வித் லவ்' படத்தின் முதல் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது. பிரபல தயாரிப்பாளர் அருண் விஸ்வா சமீபத்தில் இப்படத்தை பார்த்துவிட்டு, தனது விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவில், நீண்ட நாட்கள் கழித்து மிகவும் எமோஷனல் மற்றும் Fun-ஆன படம் பார்த்தேன் என்று பதிவு செய்துள்ளார். மேலும் அறிமுக இயக்குநர் மதன் படம் முழுக்க நம்மை சிரிக்க வைத்துள்ளார் என்றும் நடிகர் அபிஷன் ஜீவிந்த், நடிகை அனஸ்வரா ராஜன் மற்றும் உடன் நடித்த நடிகர்கள், நடிகைகள் அனைவரின் நடிப்பையும் பாராட்டியுள்ளார். தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் மற்றும் ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா என அனைவருக்கும் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இவருடைய முதல் விமர்சனத்தின் மூலம் படம் நன்றாக வந்துள்ளது என தெரிகிறது.
After long time happened to watch a real comfort film which is sweet,emotional and fun! #WithLove belongs to debut director @madhann_n who brought in so much life and innocence! Simple yet original film which will make us smile throughout! @Abishanjeevinth you are here to stay as…
— arun Viswa (@iamarunviswa) January 31, 2026