திங்கட்கிழமையிலும் நல்ல வசூல் வேட்டை நடத்திய அருண் விஜய்யின் யானை- மொத்தம் இவ்வளவா?
தமிழ் சினிமா இந்த வருடம் மிகவும் நல்ல நல்ல படங்களை பார்த்து வருகிறது. கதைக்களத்தில் வெற்றிகான வசூலும் யாரும் எதிர்ப்பாராத அளவு எல்லா படங்களும் வசூலிக்கின்றன.
பெரிய எதிர்ப்பார்ப்பு வைக்கும் படங்கள் சில வசூலில் சொதப்பவும் செய்கிறது. அப்படி நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் இந்த அளவிற்கு வசூல் வேட்டை நடத்துமா என யாருமே எதிர்ப்பார்க்கவில்லை.
அப்படி ஒரு வசூல் வேட்டை நடத்தியது படம். தற்போது அருண் விஜய்யின் யானை திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
யானை மொத்த வசூல்
கடந்த வெள்ளிக்கிழமை படு மாஸாக வெளியான திரைப்படம் அருண் விஜய்யின் யானை. ஹரி இயக்கத்தில் முதன்முறையாக அவர் நடித்துள்ள இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார்.
வழக்கமான ஹரியின் திரைப்படம், அதிரடி வசூல் வேட்டை நடத்துகிறது. இதுவரை மொத்தமாக படம் ரூ. 11 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. திங்கட்கிழமையிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan
