25 நாட்களில் அருண் விஜய்யின் யானை திரைப்படம் ஒட்டுமொத்தமாக எவ்வளவு வசூல் செய்தது தெரியுமா?
யானை பட வசூல்
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அருண் விஜய், இவரின் நடிப்பில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் வெளியான திரைப்படம் யானை.
பெரிய எதிர்பார்பிற்கு இடையே வெளியான யானை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் தற்போது வெற்றிகரமாக 25 நாட்களை திரையரங்கில் கடந்துள்ள யானை திரைப்படத்தின் ஒட்டுமொத்த தமிழ்நாடு வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
ஆம், அதன்படி யானை திரைப்படம் 25 நாட்களில் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 20 கோடியை வசூல் செய்திருக்கிறது.
நடிகர் அருண் விஜய்க்கு தடம் திரைப்படத்திற்கு பின் ரூ. 20 கோடி வசூல் செய்த இரண்டாவது திரைப்படம் யானை என்பது குறிப்பிடத்தக்கது.
வாரிசு திரைப்பட ஷூட்டிங்கில் முக்கிய நடிகர்கள் எடுத்துக்கொண்ட போட்டோ ! யார் யார் உள்ளனர் பாருங்க

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri
