தமிழ் இயக்குனருடன் கூட்டணி வைக்கும் யாஷ்.. அப்போ ரசிகர்களுக்கு மாஸ் விருந்து தான்!
2018 -ம் ஆண்டு வெளியான கே.ஜி.எஃப் படத்தின் மூலம் இந்தியளவில் பிரபல நடிகராக மாறியவர் தான் யாஷ். முதல் பாகத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பால் இரண்டாம் பாடம் பிரமாண்டமாக தயாராகி வெளியானது.
கே.ஜி.எஃப் 2 கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வசூல் சாதனையை படைத்தது. இதையடுத்து இப்படத்தின் மூன்றாம் பாகத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
பிரமாண்ட கூட்டணி
தற்போது கே.ஜி.எஃப் பிரஷாந்த் நீல் தெலுங்கில் பிரபாஸ் வைத்து சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிந்தவுடன் தான் கே.ஜி.எஃப் மூன்றாம் பாகத்தை தொடங்க முடியும்.
இந்நிலையில் யாஷ் தமிழ் இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் நடிக்க போவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
மேலும் யாஷ் மலையாள இளம் இயக்குனர் கீத்து மோகன்தாஸ் இயக்கத்திலும் நடிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
விஜய்யின் அடுத்த படம் இந்த இயக்குனருடன் தானா!.. புலம்பி தள்ளும் விஜய் ரசிகர்கள்

அரபு வர்த்தகர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட 450 ஆண்டுகள் பழமையான மரம்.., 40 பேர் தங்கலாம் News Lankasri
