தமிழ் நடிகரின் சூப்பர் ஹிட் படத்தை ரீமேக் செய்து ஹிட் கொடுத்த ராக்கி பாய்..!
இன்று இந்தியா சினிமாவே வியந்து பார்க்கும் திரைப்படம் என்றால் அது KGF தான், சமீபத்தில் வெளியான இப்படத்தின் இரண்டாம் பாகம் பெரிய வெற்றியடைந்துள்ளது.
அப்படியான KGF படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாகி இருப்பவர் நடிகர் யஷ், கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள யஷ் தற்போது பான் இந்தியன் நடிகராகிவிட்டார்.
KGF படங்களை தொடர்ந்து யஷ் நடிப்பில் வெளியாகவுள்ள அடுத்தடுத்த படங்களின் மேல் இனி பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இந்நிலையில் தற்போது பான் இந்தியன் அளவில் முக்கிய நடிகராக மாறியுள்ள யஷ், ஆரம்பத்தில் தமிழ் படத்தை ரீமேக் செய்து நடித்துள்ளார்.
ஆம், யஷ் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான Kirataka என்ற திரைப்படம் தமிழில் சூப்பர் ஹிட்டான களவாணி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தற்போது நெட்டிசன்கள் இது குறித்து மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
பீஸ்ட் தோல்விக்கு இதுதான் காரணம்? மறைமுகமாக சொன்ன பிரபல தயாரிப்பாளர்

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
