இனிமேல் அதை மட்டும் செய்ய மாட்டேன்: மனம் மாறிய யாஷிகா ஆனந்த்!
யாஷிகா விபத்தில் இருந்து மீண்டு வந்திருக்கும் நிலையில் இனி பைக், கார் ஓட்ட மாட்டேன் என தெரிவித்து உள்ளார்.
விபத்து
யாஷிகா ஆனந்த் கடந்த வருடம் ஜூன் 25ம் தேதி இரவு கார் விபத்தில் சிக்கிய நிலையில் அவர் படுகாயம் அடைந்தார். அவரது தோழி பாவனி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
யாஷிகா பல மாதங்களாக சிகிச்சையில் இருந்தார். படுத்த படுக்கையாக இருந்த அவர் தற்போது நடக்க தொடங்கி இருக்கிறார். நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்க்க தொடங்கி இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது இறந்த தனது தோழி பற்றி உருக்கமாக அவர் பதிவுகளும் போட்டு வருகிறார்.
இனி பைக், கார் ஓட்ட மாட்டேன்
இந்நிலையில் யாஷிகா தற்போது ஒரு முக்கிய முடிவை எடுத்து இருக்கிறார். உடல் முழுவதும் பல அறுவை சிகிச்சைகள் செய்து இருப்பதால் இனி பைக் மற்றும் கார் ஓட்ட மாட்டேன் என தெரிவித்து உள்ளார்.
அவர் ஒரு பைக் வைத்திருந்த நிலையில் தற்போது அதை அவரது சகோதரரிடம் கொடுத்து விட்டாராம்.
வலிமை ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் செய்த விஷயம்! வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்