சொந்தமாக புதிய வீடு வாங்கியுள்ள நடிகை யாஷிகா ஆனந்த்- அவரே வெளியிட்ட அழகிய புகைப்படம்
தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
பின் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
உடனே யாஷிகா யாஷிகா என ரசிகர்கள் புகழ அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நன்றாக விளையாடி இருந்தார். இந்நிகழ்ச்சிக்கு பின் சில தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாஷிகா வாழ்க்கையில் ஒரு சோகமான விஷயம் நடந்தது.
அதாவது அவருக்கு விபத்து ஏற்பட அதனால் அவர் தனது தோழியையும் இழந்தார்.

புதிய வீடு வாங்கிய யாஷிகா
விபத்து தாக்கத்தில் இருந்து வெளியே வந்துள்ள யாஷிகா இப்போது அதிகம் போட்டோ ஷுட்கள் நடத்தி வருகிறார். அதோடு இன்னொரு சந்தோஷமான விஷயத்தை அவர் பகிர்ந்துள்ளார்.
அதாவது அவர் புதியதாக சொந்த வீடு ஒன்று வாங்கியுள்ளாராம், தனது அம்மா-அப்பா கனவை சிறுவயதிலேயே நிறைவேற்றி இருப்பதாக அவர் இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.
இந்த வார இறுதியில் முடியப்போகும் சன் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியல்- ரசிகர்கள் வருத்தம்