ட்விட்டரின் அழிவுகாலம் ஆரம்பம்.. ப்ளூடிக் போனதால் கோபமாக யாஷிகா ஆனந்த் எடுத்த முடிவு
ட்விட்டர் ப்ளூ டிக்
ட்விட்டரில் முன்னணி பிரபலங்கள் பலரது ப்ளூ டிக் நீக்கப்பட்டது இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சினிமா, அரசியல் என பல துறைகளில் அதிகம் followers வைத்திருக்கும் பிரபலங்களின் கணக்குகள் கூட தற்போது பாதிக்கப்பட்டு இருக்கிறது.
மாதம்தோறும் பணம் செலுத்தினால் தான் இனி ப்ளூடிக் பெற முடியும் என்கிற நிலை தான் ஏற்பட்டு இருக்கிறது.
ட்விட்டரை விட்டே வெளியேறும் யாஷிகா
இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் ட்விட்டர் கணக்கில் இருந்தும் ப்ளூடிக் நீக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அவர் ட்விட்டரை விட்டே வெளியேறுவதாக அவர் அறிவித்து இருக்கிறார்.
ட்விட்டரின் downfall ஆரம்பமாகிவிட்டது, காசு கொடுத்து verified ஆக இருக்க முடியாது, எல்லோரும் ட்விட்டரை விட்டு வெளியேறிவிடலாம் என மற்ற பிரபலங்களையும் அவர் அழைத்து இருக்கிறார்.



ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
