பாக்ஸ் ஆபிஸை அடுத்து நொறுக்கிய என்னை அறிந்தால்.. 8 வருடம் ஆகியும் மறக்கமுடியாத சம்பவம்
என்னை அறிந்தால்
கவுதம் மேனன் இயக்கத்தில் முதல் முறையாக அஜித் நடித்து வெளிவந்த திரைப்படம் என்னை அறிந்தால்.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அனுஷ்கா, திரிஷா, விவேக், அருண் விஜய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
வசூல் வேட்டை
இந்நிலையில், பாக்ஸ் ஆபிஸில் இப்படம் ரூ. 101 கோடி வரை வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே ரூ. 52 கோடிக்கும் மேல் வசூல் செய்த என்னை அறிந்தால் திரைப்படம் வெளிநாட்டில் ரூ. 28 கோடி வரை வசூல் செய்துள்ளது.
மேலும் கேரளாவில் ரூ. 6 கோடி, கர்நாடகாவில் ரூ. 6.5 கோடி, தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் ரூ. 5.5 கோடி மற்ற மாநிலங்களில் ரூ. 3 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கியுள்ளது என்னை அறிந்தால்.
இப்படம் இன்றுடன் வெளிவந்து 8 வருடங்கள் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏகே 62வில் இரண்டு இயக்குனர்களா..? புதிதாக கிளம்பிய வதந்தி