விஜய் போல் என்னால் அதை செய்யமுடியாது.. ஓப்பனாக கூறிய ஷாருக்கான்
ஜவான்
அட்லீ இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் ஜவான். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா நேற்று மாலை பிரம்மண்டமாக சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு படத்தில் நடித்த நட்சத்திரங்கள், படத்தில் வேலை செய்தவர்கள் அனைவரும் வந்திருந்தனர். ஆனால், நடிகை நயன்தாரா மட்டும் வரவில்லை. வழக்கம் போல் இந்த ப்ரோமோஷன் விழாவிலும் நயன் கலந்துகொள்ளவில்லை.
மேடையில் பேசிய நடிகர் ஷாருக்கான் படத்தில் தன்னுடைய வேலை செய்த அனைவரை பற்றியும் பேசினார். அப்போது நடன இயக்குனர் ஷோபி மாஸ்டர் குறித்து பேசும்போது, சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்துகொண்டார்.
ஓப்பனாக கூறிய ஷாருக்கான்
அவர் கூறியதில் 'ரஜினி மற்றும் விஜய் போல் எனக்கு நடனம் ஆட தெரியாது. ஷோபி மாஸ்டர் இடம் எனக்கு கடினமான ஸ்டெப்ஸ் கொடுக்காதீங்க என்று கூறினேன்' என பேசியுள்ளார் ஷாருக்கான். இந்த விஷயம் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் மற்றும் மகளா இது, நன்றாக வளர்ந்து ஆளே மாறிவிட்டார்களே- லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
