தீண்டாமை நடந்ததா? சர்ச்சைக்கு யோகி பாபு கொடுத்த விளக்கம்
நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் உச்ச காமெடியனாக இருந்து வருகிறார். அவர் இல்லாத பெரிய ஹீரோ படங்களே இல்லை என சொல்லும் அளவுக்கு பல ஹீரோக்களில் படங்களில் நடித்து வருகிறார் அவர். இந்த வாரம் ரிலீஸ் ஆகும் ஜெயிலர் படத்தில் அவர் ரஜினி உடன் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
யோகி பாபு சமீபத்தில் ஒரு கோவிலுக்கு சென்ற போது அந்த கோவில் குருக்கள் அவருக்கு கை கொடுக்காமல் தவிர்த்து தீண்டாமையை கடைபிடித்ததாக ஒரு வீடியோ வைரல் ஆனது.

யோகி பாபு விளக்கம்
இந்த சர்ச்சைக்கு தற்போது யோகி பாபுவே விளக்கம் கொடுத்து இருக்கிறார். "சிறுவாபுரி கோவிலுக்கு 12 ஆண்டுகளுக்கும் மேலாக நான் சென்றுகொண்டிருக்கிறேன். அப்போதிருந்தே அந்த குருக்களை தெரியும்."
"வேண்டுமென்றே யாரோ இப்படி பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். அது பழைய வீடியோ. இதில் சாதி பார்க்க வேண்டாம், குருக்களால் தீண்டாமை எதுவும் நடைபெறவில்லை" என யோகி பாபு கூறி இருக்கிறார்.

வசூலை வாரிக்குவிக்கும் DD Returns.. சந்தானத்தின் கேரியர் Best இதுதானாம்