கார் விபத்தில் சிக்கிய நடிகர் யோகி பாபு..? உண்மை இதுதான்
யோகி பாபு
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் யோகி பாபு. நகைச்சுவை கதாபாத்திரங்கள் மட்டுமின்றி தற்போது ஹீரோவாகவும் கலக்கிக்கொண்டு இருக்கிறார். இவர் கைவசம் தற்போது குட் பேட் அக்லி, Medical Miracle, ராஜா சாப் உள்ளிட்ட பல படங்கள் உள்ளனர்.
இந்த நிலையில், நடிகர் யோகி பாபு சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
விபத்து
வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் அதிகாலை நடிகர் யோகி பாபு சென்ற கார் விபத்தில் சிக்கியது என்றும் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலை தடுப்பு மீது ஏறி விபத்து ஏற்பட்டது என்றும் கூறப்பட்டது. மேலும் எந்த காயங்களும் இன்றி நடிகர் யோகி பாபு உயிர் தப்பியதாகவும் கூறப்பட்டது.
ஆனால், இந்த தகவல் உண்மையில்லை என மறுப்பு தெரிவித்து, நான் நலமாக இருக்கிறேன் என கூறியுள்ளார் நடிகர் யோகி பாபு. இவருடைய இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Im fine all. This is false news pic.twitter.com/EwO3MB3T2Q
— Yogi Babu (@iYogiBabu) February 16, 2025