சதுரங்க வேட்டை படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த ஹெச். வினோத் தற்போது அஜித்தை வைத்து தொடர்ந்து மூன்று படங்கள் இயக்கி இருக்கிறார்.
அவரது இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் துணிவு படம் 2023 பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதை அடுத்து ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிக்க உள்ளதாக தகவலும் வெளிவந்தது. ஆனால் அந்த படம் பற்றி உறுதியான அறிவிப்பு வரவில்லை.
யோகி பாபு தான் ஹீரோ
சமீபத்தில் ஹெச் வினோத் அளித்த பேட்டியில், "தற்போது யோகி பாபுவிடம் ஒரு கதை கூறியுள்ளேன். ஆனால் அது தான் என்னோட அடுத்த படமா என்று தெரியவில்லை. அந்த படத்தில் யோகி பாபு தான் கதாநாயகன்".
"சின்ன சின்ன திருட்டு செய்யும் ஒரு அப்பாவி திருடன் மற்றும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி இவர்களை வைத்து தான் இந்த படத்தின் கதையம்சம் இருக்கும்" என கூறியுள்ளார் ஹெச் வினோத்.
இதற்கு முன்பு யோகி பாபு ஹீரோவாக நடித்து வெளியான "மண்டேலா" படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
விக்ரமன் என்ன காந்தியா.. பிக் பாஸ் எதுக்கு வந்தார்: தாக்கி பேசிய வனிதா