அச்சு அசல் அப்படியே சிவகார்த்திகேயன் உரித்து வைத்திருக்கும் இளம் நடிகர்.. அதிர்ச்சி கொடுத்த புகைப்படம்
சிவகார்த்திகேயன்
எந்த ஒரு இடத்திலும் இவர் என்ட்ரி கொடுத்துவிட்டார் என்றால், அந்த இடத்தில் என்டர்டைன்மெண்ட்டுக்கு பஞ்சமே இருக்காது.
சின்னத்திரையிலும் சரி வெள்ளித்திரையிலும் சரி தொடர்ந்து நம்மை என்டர்டைன்மெண்ட் செய்து வரும் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்.
இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த மாவீரன் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து அயலான் திரைப்படம் பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
அதிர்ச்சி கொடுத்த நடிகர்
ஒருவரை போல் உலகில் 7 பேர் இருப்பார்கள் என பலரும் சொல்லி நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால், அதை கண்முன் பார்ப்பது என்பது அரிது தான்.
சில சமயங்களில் ஒருவரை போல் மற்றொருவர் முக ஒற்றுமையுடன் இருப்பதையும் நாம் பார்த்து இருக்கிறோம். அப்படி ஷாக் கொடுக்கும் வகையில் தற்போது ஒரு விஷயம் நடந்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயனை அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருக்கும் இளம் நடிகர் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இவர் அசோக் செல்வனின் சபா நாயகன் படத்தில் அவருடைய நண்பன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டிரைலர் பார்த்த ரசிகர்கள் பலரும், இவரை பார்க்க நடிகர் சிவகார்த்திகேயனை பத்து வருடத்திற்கு முன் பார்ப்பது போலவே இருக்கிறது என கூறி வருகிறார்கள்.
இதோ அவரின் புகைப்படம்..