ஹோலி பண்டிகை முடித்து வீடு திரும்பிய நடிகை உயிரிழப்பு- கடும் அதிர்ச்சியில் குடும்பத்தினர்
தெலுங்கு சினிமாவில் துணை நடிகையாக நடித்து மக்களிடம் பிரபலம் ஆனவர் காயத்ரி. படங்களில் நடிப்பதை தாண்டி வெப் சீரியஸ், தொலைக்காட்சி தொடர்கள் போன்றவற்றிலும் நடித்துள்ளார்.
ஹோலி பண்டிகை
நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. எல்லோரும் கொண்டாட காயத்ரியும் தனது நண்பர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடியுள்ளார். கொண்டாட்டத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது படு பயங்கர கார் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார்.
இருவர் பலி
கார் மருத்துவமனை முன் வேலை செய்துகொண்டிருந்த பெண் மீது மோத அந்த பெண்ணும், நடிகை காயத்ரியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காரை ஓட்டிவந்த அவரது நண்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தின் காரணம்
மது போதையில் காயத்ரியின் நண்பர் கார் வேகமாக ஓட்டியதே விபத்தின் காரணம் என கூறப்படுகிறது. 26 வயதான நடிகையின் இந்த மரணம் தெலுங்கு சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படம்.. யாருடன் எடுத்துள்ளார் பாருங்க