இளம் நடிகையின் ரூமுக்குள் நுழைந்த மூத்த தெலுங்கு ஹீரோ.. நடிகையின் அம்மாவை எட்டி மிதித்த சம்பவம்

Kathick
in பிரபலங்கள்Report this article
இளம் நடிகை
குழந்தை நட்சத்திரமாக இருந்த நடிகை ஒருவர் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு தேடிக்கொண்டு இருக்கிறார். அப்போது தெலுங்கில் இருந்து ஒரு மிகப்பெரிய நடிகருக்கு தங்கையாக நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வருகிறது.
படத்தில் கமிட்டான அந்த நடிகை தனது அம்மாவுடன் கிளம்பி படப்பிடிப்பிற்கு சென்றுள்ளார். நாளை தான் படப்பிடிப்பு என்பதால் அதுவரை ஹோட்டல் ரூமில் தங்கியுள்ளனர். அதன்பின் படத்தின் ஹீரோவையும் சந்தித்துள்ளனர்.
நாளை படப்பிடிப்பு என கனவில் இருந்த நடிகைக்கு திடீரென அதிர்ச்சியை கொடுத்துள்ளார் அந்த டாப் ஹீரோ. இரவு 10 மணிக்கு நடிகை தங்கியிருந்த ஹோட்டல் ரூம் கதவை தட்டியுள்ளார்.
நடிகைக்கு நடந்த கொடுமை
கதவை திறந்தவுடன் ரூமுக்குள் வந்த ஹீரோவை பார்த்து நடிகையின் தாய் புரிந்துகொண்டார், ஏன் எதற்காக இவர் இரவு 10 மணிக்கு ரூமுக்கு வந்துள்ளார் என்று. உடனடியாக ஹீரோயின் காலில் விழுந்து கதறி அழுதுள்ளார் நடிகை தாய்.
அந்த நடிகையும் எங்களைவிட்டு விடுங்கள் என கதறி அழுதுள்ளார். நீண்ட நேரமாக ஹீரோவின் கால்களை பிடித்துக்கொண்டு விடாமல் இருந்துள்ளார்.
அப்போது சில நிமிடங்கள் யோசித்த அந்த ஹீரோ, நடிகையையும், நடிகையின் தாய்யையும் பார்த்து ஓடிவிடுங்கள், என் கண்முன் நிற்கக்கூடாது, நாளை உங்களை நான் பார்க்கவே கூடாது என கூறிவிட்டு ரூமில் இருந்து வெளியே சென்றாராம். ரூமில் இருந்து வெளியேறுவதற்கு முன் தனது கால்களை பிடித்திருந்த நடிகையின் தாய்யை எட்டி உதைத்துவிட்டு சென்றாராம்.
இதன்பின் உடனடியாக அந்த இரவே அங்கிருந்து நடிகையும், அவருடைய தாய்யும் கிளம்பி சென்னை வந்துள்ளனர். நடிகைகளுக்கு எதிராக இதுபோன்ற பல கொடுமைகள் நடந்துகொண்டே தான் இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட விசித்ரா தனக்கு நடந்த பாலியல் கொடுமை குறித்து கண்கலங்கி பேசினார். அது எந்த ஹீரோ என்று உடனடியாக ரசிகர்கள் கண்டுபிடித்தனர். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.