ரஜினியுடன் இணையும் நடிகை பிரியங்கா மோகன்.. அதுவும் எப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் தெரியுமா
தலைவர் 169
ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகவுள்ள திரைப்படம் தலைவர் 169.
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் தயாராகவுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு, மாஸ் வீடியோவுடன் சன் பிச்சர்ஸ் வெளியிட்டு இருந்தது.
சமீபத்தில், இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிப்பார் என்று கூறப்பட்டது.
மகளாக பிரியங்கா மோகன்

இந்நிலையில், தலைவர் 169 படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடிக்க, பிரபல இளம் நடிகை பிரியங்கா மோகனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சொந்தமாக விமானம் வாங்கி வைத்திருக்கும் இந்திய நடிகர்கள்! யார் யார் தெரியுமா? முழு லிஸ்ட்