பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதா.. பத்திரிகையாளர் கேள்விக்கு பதில் கூறிய யுவன்
யுவன் ஷங்கர் ராஜா
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் இசையில் கடந்த ஆண்டு வெளிவந்த லவ் டுடே திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.
இதை தொடர்ந்து தற்போது தளபதி 68 படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்த யுவன் சமீபகாலமாக தொடர்ந்து பல படங்கள் பண்ணுவதில்லை.
இதனால் அவருடைய ரசிகர்களும் சற்று வருத்தத்தில் உள்ளனர். இவர் இசையில் வெளிவந்த மங்காத்தா, பருத்திவீரன், பில்லா, தர்மதுரை, வானம் உள்ளிட்ட பல படங்களில் தான் அமைத்த இசையின் மூலம் இன்றும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.
பதில் கூறிய யுவன்
இந்நிலையில், சமீபத்தில் இவர் நடத்திய கச்சரியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு பத்திரிகையாளர் 'ஏன் தொடர்ந்து பல படங்கள் பண்ணுவதில்லை, வாய்ப்புகள் குறைந்துவிட்டதா' என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த யுவன் 'இல்லை நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து பண்ணலாம் என நினைக்கிறன், அதனால் தான்' என கூறினார்.
50 கோடியை கடந்து வசூல் வேட்டை நடத்தி வரும் மாவீரன்.. இதுவரை எவ்வளவு தெரியுமா

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
