அஜித் செய்த உதவி.. யுவன் ஷங்கர் ராஜா கூறிய உணர்ச்சிபூர்வ சம்பவம்
யுவன் ஷங்கர் ராஜா
தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் யுவன் ஷங்கர் ராஜா. இசை குடும்பத்தில் இருந்து வந்த இவர் பல வெற்றி பாடல்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்துள்ளார்.
இவர் இசையமைப்பில் கடைசியாக விஜய் நடித்த கோட் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.
'அரவிந்தன்' என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகமானார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், அதை தொடர்ந்து அவர் இசையமைத்த படங்கள் எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
தொடர்ச்சியாக இவர் இசையமைப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை. தற்போது, இவர் பாடலுக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கும் நிலையில், அவரது வெற்றிக்கு முக்கிய காரணம் நடிகர் அஜித் என்ற அதிர்ச்சி தகவலை யுவன் பகிர்ந்துள்ளார்.
அஜித்
அதில், "நான் ராசியில்லாத இசையமைப்பாளர் என்றும் என்னால் தான் படங்கள் தோல்வி அடைகிறது என்றும் கூறி என்னை ஒதுக்கிவிட்டார்கள். அப்போது அஜித் என் வீட்டிற்கு வந்து அவர் நடிக்கும் 'தீனா' திரைப்படத்தில் நான் தான் இசையமைக்க வேண்டும், என் திறமையை இதன் மூலம் காட்ட வேண்டும் என்று கூறினார். அது எனக்கு ஒரு கம் பேக் படமாக அமைந்தது" என்று கூறியுள்ளார்.

எனக்கு முன்னாடி 4 பேர்; இந்த வேலைக்கு பேர் என்ன? - நடிகை விஜயலட்சுமிக்கு சீமான் பதிலடி IBC Tamilnadu

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

மன்னர் காலத்து இரும்பு உள்ளாடை: ராணிகளின் ரகசியம் உண்மையா? வைரல் வீடியோவின் அதிர்ச்சி பின்னணி! News Lankasri
