விஜய் டிவி vs ஜீ தமிழ்! இந்த விஷயத்தில் கூடவா போட்டி
விஜய் டிவி vs ஜீ தமிழ்
சின்னத்திரையில் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவிக்கு அடுத்த இடத்தில் இருந்து வருகிறது விஜய் டிவி. அதனை தொடர்ந்து ஜீ தமிழ் மூன்றாம் இடத்தில் இருந்து வருகிறது.
சேனல்களுக்கு நடுவில் போட்டி இருக்கிறது என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. நல்ல ரேட்டிங் பெறுவதற்காகவே சேனல்கள் போட்டி போட்டுகொண்டு நிகழ்ச்சிகள் புதிது புதிதாக உருவாக்கி வருகின்றனர்.
இதிலுமா போட்டி
விஜய் டிவி சமீபத்தில் திருமணம் ஆன ரவீந்தர் - மஹாலக்ஷ்மி ஜோடியை அழைத்து வந்து ஒரு ஷோ நடத்தி இருந்தனர். அதற்க்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.
இந்நிலையில் ஜீ தமிழும் இதே போன்ற ஒரு ஷோவை போட்டிக்கு செய்திருக்கிறது. நடிகர் ராஜ்கிரண் மகள் சீரியல் நடிகர் முனிஷ் ராஜாவை ரகசிய திருமணம் செய்து கொண்டார் என்கிறசெய்தி வந்ததும், அதனை தொடர்ந்து அவர் எனது வளர்ப்பு மகள் தான் என ராஜ்கிரண் விளக்கம் கொடுத்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த ஜோடியை தான் ஜீ தமிழ் 'சீதா ராமன்' என்ற ஷோவுக்கு அழைத்து வந்து எல்லோர் முன்பும் திருமணம் செய்து வைத்திருக்கின்றனர்.
பிக் பாஸில் நுழையும் பிரபல ஹீரோயினின் அண்ணன்! யார் தெரியுமா