முடிவுக்கு வரும் ஜீ தமிழின் பிரபல சீரியல்- கடும் வருத்தத்தில் ரசிகர்கள்
சன், விஜய் தொலைக்காட்சி தான் சீரியல்கள் பெரும் பார்வையாளர்களில் டாப்பில் இருப்பவர்கள். அந்த தொலைக்காட்சிகளை அடுத்து ஜீ தமிழ் தொடர்களை ரசிகர்கள் அதிகம் பார்க்கிறார்கள்.
ஜீ தமிழிலும் கொரோனா லாக் டவுன்களுக்கு பிறகு புத்தம் புதிய சீரியல்கள் நிறைய வந்துள்ளன.
புதிய சீரியல்கள், முடிவுக்கு வரும் தொடர்
செம்பருத்தி, பூவே பூச்சூடவா என இதில் நிறைய ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது. இதில் செம்பருத்தி சீரியல் 1000 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓளிபரப்பாகி வந்தாலும் எப்போதும் இந்த தொடர் முடிகிறது என கேட்கும் ரசிகர்களும் உள்ளார்கள்.
அதேபோல் பேரன்பு, புதுப்புது அர்த்தங்கள், வித்யா நம்பர் 1, ரஜினி என தொடர்ந்து புதிய சீரியல்களும் ஒளிபரப்பாகி வருகிறது.
தற்போது என்ன தகவல் என்றால் நன்றாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் என்றென்றும் புன்னகை தொடர் முடிவுக்கு வர இருக்கிறதாம்.
கடந்த மார்ச் 2020ம் ஆண்டு தொடங்கிய இந்த தொடர் 500 எபிசோடுகளை தாண்டிவிட்டது, இதை பிரபல நாயகி நீலிமா ராணி தான் தயாரித்து வருகிறார். தொடர் முடிவுக்கு வருகிறது என்ற செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள் இது தவறான முடிவு என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
அடுத்தடுத்து நடிகை பூஜா ஹெட்ச்கு வந்த சோதனை- வருத்தப்படும் ரசிகர்கள்