ஜீ தமிழில் முடிவுக்கு வரும் இரண்டு ஹிட் சீரியல்கள்- இந்த வெற்றிகரமான தொடர்களா?
ஜீ தமிழ்
தமிழ் சின்னத்திரையில் வளர்ந்து வரும் தொலைக்காட்சியில் ஒன்று ஜீ தமிழ்.
ஒரேஒரு நிகழ்ச்சி இந்த தொலைக்காட்சியை மக்களுக்கு நன்கு அறிய வைத்தது. சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பிரபலமாக தொலைக்காட்சியையும் மக்கள் தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தார்கள்.
அதில் இருந்து ஜீ தமிழில் நிறைய தொடர்கள், நிகழ்ச்சிகள் வர ஆரம்பித்தன.
இப்போது இதில் ஒளிபரப்பாகும் நிறைய சீரியல்கள் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.
முடியும் தொடர்கள்
நடிகை தேவயானி நீண்ட இடைவேளைக்கு பிறகு கோலங்கள் தொடர் புகழ் நடிகருடன் இணைந்து புதுப்புது அர்த்தங்கள் என்ற தொடர் நடித்து வந்தார், இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் முதல் பாக வெற்றியை தொடர்ந்து ஒளிபரப்பான சத்யா 2 சீரியலும் முடிய இருக்கதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த இரண்டு சீரியல் குறித்தும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
மகாலட்சுமி பெட்ரூம் புகைப்படத்தை வெளியிட்ட ரவீந்தர்- செம கியூட்டான புகைப்படம் இதோ