வெளிவந்து 24 ஆண்டுகள் ஆகும் ஹே ராம் படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
ஹே ராம்
கமல் ஹாசன் இயக்கி நடித்து கடந்த 2000ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஹே ராம். முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவான இப்படம் வெளிவந்த சமயத்தில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
ஆனால், வெளிவருவதற்கு முன் தயாரிப்பாளரான கமலுக்கு இப்படம் லாபத்தை கொடுத்துவிட்டதாக அவரே கூறியிருந்தார். ராஜ் கமல் நிறுவனத்தில் இருந்து வெளிவந்த திரைப்படங்களில், வெளியிடுவதற்கு முன்பே லாபத்தை கொடுத்தது இரண்டே திரைப்படங்கள் தான் என்றும், அதில் ஒன்று ஹே ராம் என்றும் கூறியிருந்தார்.
இப்படத்தில் கமலுடன் இணைந்து ராணி முகேர்ஜி, ஷாருக்கான், வசுந்தரா தாஸ், ஹேம மாலினி, வாலி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அன்று மக்களால் கொண்டாடப்படாத இப்படம் இன்று உலகளவில் உள்ள ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது.
ஹே ராம் வசூல்
இந்நிலையில், ஹே ராம் திரைப்படம் வெளிவந்து 24 வருடங்களை கடந்துள்ள நிலையில், உலகளவில் இப்படம் ரூ. 15 முதல் ரூ. 20 கோடி வரை வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது. ஒருவேளை இப்படம் இன்றைய சினிமா காலகட்டத்தில் வெளிவந்திருந்தால் மாபெரும் வசூல் சாதனை செய்திருக்கும் என்பதே பல ரசிகர்களுடைய கருத்தாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Celebrating the epic saga #24YearsofHeyRam #Ulaganayagan #KamalHaasan #HeyRam Full Movie ➡️ https://t.co/wg9boutI4r @ikamalhaasan @ilaiyaraaja @iamsrk @DOP_Tirru pic.twitter.com/EkRryXocSM
— Raaj Kamal Films International (@RKFI) February 18, 2024