30 நாட்களில் சென்னையில் தரமான வசூல் வேட்டை நடத்தியுள்ள கமல்ஹாசனின் விக்ரம்- இதுவரை இவ்வளவு வசூலா?

By Yathrika Jul 02, 2022 10:46 AM GMT
Report

விஸ்வரூபம் படத்திற்கு பிறகு படங்கள் கமிட்டாவதையும், நடிப்பதையும் நிறுத்தி இருந்தார் கமல்ஹாசன், அதாவது இடைவேளை விட்டிருந்தார்.

ஆனாலும் சின்னத்திரையில் கலக்குவது, அரசியலில் ஈடுபடுவது என பிஸியாகவே இருந்தார். இந்தியன் 2 படமும் நடித்து வந்தார், ஆனால் சில பிரச்சனைகளால் படம் அப்படியே நின்றுவிட்டது, எப்போது தொடங்கும் என தெரியவில்லை.

இந்த நேரத்தில் தான் மீண்டும் நடிக்கலாம் என முடிவு செய்து விக்ரம் என்ற படத்தில் நடித்தார் கமல். அப்படம் கடந்த ஜுன் 3ம் தேதி வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.

இப்படத்திற்காக கமல்ஹாசன் செய்த புரொமோஷன் தான் மிகவும் ஹைலைட். ஒரு பேட்டியில் கூட இயக்குனர் லோகேஷ் பேசும்போது, ஒரு சேனலுக்கு சென்று பேட்டி கொடுத்துவிட்டு வருவதற்குள் கமல்ஹாசன் அவர்கள் இன்னொரு மாறிலத்தில் இருப்பார்.

அந்த அளவிற்கு இப்படத்திற்காக அவர் செய்த புரொமோஷன் வேலை அதிகம் என பேசியிருந்தார்.

30 நாட்களில் சென்னையில் தரமான வசூல் வேட்டை நடத்தியுள்ள கமல்ஹாசனின் விக்ரம்- இதுவரை இவ்வளவு வசூலா? | 30 Days Vikram Chennai Box Office

பட சென்னை வசூல்

4 வாரத்தை தாண்டி 5வது வாரத்திலும் படத்திற்கு நல்ல புக்கிங் இருப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் மட்டும் 30 நாட்களில் படம் ரூ. 16.28 கோடி வரை வசூலித்துள்ளதாக அட்டகாசமான தகவல் வந்துள்ளது.

முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் அருண் விஜய்யின் யானை படம் செய்துள்ள வசூல்? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US