கணவன், மனைவியாக விருதுகளை வென்ற ரன்பீர் கபூர், ஆலியா பட்.. 69th பிலிம்பேர் விருதுகள் பட்டியல் இதோ
பிலிம்பேர் விருதுகள்
ஒவ்வொரு வருடமும் பிலிம்பேர் விருதுகள் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறும். தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல்வேறு திரையுலகிற்கு நடக்கும் இந்த பிலிம்பேர் விருதை கைப்பற்ற வேண்டும் என பலரும் ஆசைப்படுவார்கள்.
திரையுலகில் மிகவும் பிரபலமான விருதுகளில் ஒன்றாக இருக்கும் பிலிம்பேர் விருதுகளின் 69வது ஆண்டுகள் விழா பிரம்மாண்டமாக நேற்று நடைபெற்றுள்ளது. இந்த விருது விழாவில் பாலிவுட் திரையுலகிற்கான விருதுகள் வழங்கப்பட்டது.
இந்த விருது விழாவில் 12th Fail, Three of Us, ஜவான் , Rocky Aur Rani Kii Prem Kahaani உட்பட பல படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இதில் Rocky Aur Rani Kii Prem Kahaani படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை ஆலியா பட் தட்டி சென்றார்.
அதே போல் அனிமல் படத்திற்காக ரன்பீர் கபூருக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. நட்சத்திர தம்பதியாக பாலிவுட் திரையுலகில் ஜொலித்து வரும் இவர்கள் இருவரும் சிறந்த நடிகர், நடிகைக்கான விருதுகளை பெற்றனர்.
69வது பிலிம்பேர் விருதுகளின் முழு பட்டியலை பார்க்கலாம் :
- சிறந்த நடிகை Leading Role (Female) - Alia Bhatt (Rocky Aur Rani Kii Prem Kahaani)
- சிறந்த நடிகர் in a Leading Role (Male) - Ranbir Kapoor (Animal)
- சிறந்த படம் : 12th Fail
- சிறந்த இயக்குனர் - Vidhu Vinod Chopra (12th Fail)
- சிறந்த படம் (Critics’) - Joram (Devashish Makhija)
- சிறந்த நடிகர் (Critics’) - Vikrant Massey (12th Fail)
- சிறந்த நடிகை (Critics’) - Rani Mukerji (Mrs Chatterjee vs Norway), Shefali Shah (Three of Us)
- சிறந்த துணை நடிகர் - Vicky Kaushal (Dunki)
- சிறந்த துணை நடிகை - Shabana Azmi (Rocky Aur Rani Kii Prem Kahaani)
- சிறந்த பாடலாசிரியர் - Amitabh Bhattacharya (“Tere Vaaste” – Zara Hatke Zara Bachke)
- சிறந்த ம்யூசிக் ஆல்பம் - Animal (Pritam, Vishal Mishra, Manan Bhardwaj, Shreyas Puranik, Jaani, Bhupinder Babbal, Ashim Kemson, Harshwardhan Rameshwar, Gurinder Seagal)
- சிறந்த பின்னணி பாடகர் - Bhupinder Babbal (Arjan Vailly – Animal)
- சிறந்த பின்னணி பாடகி - Shilpa Rao (Besharam Rang – Pathaan)
- சிறந்த கதை - Amit Rai (OMG 2), Devashish Makhija (Joram)
- சிறந்த திரைக்கதை - Vidhu Vinod Chopra [12th
- சிறந்த வசனம் - Ishita Moitra [Rocky Aur Rani Kii Prem
- சிறந்த பின்னணி இசை - Harshavardhan Rameshwar
- வாழ்நாள் சாதனையாளர் விருது - David Dhawan
- சிறந்த ஒளிப்பதிவு - Avinash Arun Dhaware [Three of
- சிறந்த கலை இயக்கம் - Subrata Chakraborty, Amit Ray (Sam Bahadur)
- சிறந்த ஆடை வடிவமைப்பு - Sachin Lovelekar, Divvya Gambhir, Nidhhi Gambhir (Sam Bahadur)
- சிறந்த ஒலி வடிவமைப்பு - Kunal Sharma (Mpse) (Sam Bahadur) Sync Cinema (Animal)
- சிறந்த படத்தொகுப்பு - Jaskunwar Singh Kohli- Vidhu Vinod Chopra (12th Fail)
- சிறந்த சண்டை - Spiro Razatos, Anl Arasu, Craig Macrae, Yannick Ben, Kecha Khamphakdee, Sunil Rodrigues (Jawan)
- சிறந்த VFX: Red Chillies VFX (Jawan)
- சிறந்த நடனம் - Ganesh Acharya (“What Jhumka?” – Rocky Aur Rani Kii Prem Kahaani )
- சிறந்த அறிமுக இயக்குனர் - Tarun Dudeja (Dhak Dhak)
- சிறந்த அறிமுக நடிகர் - Aditya Rawal (Faraaz)
- சிறந்த அறிமுக நடிகை - Alizeh Agnihotri (Farrey)