மனிதனாக உணராத ஒருவரை வெறுக்கக் கூடும்.. ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்
ஏ.ஆர்.ரஹ்மான்
மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஹாலிவுட்டின் உயரிய விருதான ஆஸ்கர் விருதை கடந்த 2008ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக வென்றார்.
இசையமைப்பாளராக களமிறங்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பர் 1 இடத்தை பிடித்து வலம் வருகிறார். தற்போது, இவர் தமிழில் தக் லைஃப், ஜீனி ஆகிய படங்களுக்கு இசையமைக்கிறார்.
உருக்கம்
சில நாட்களாகவே ஏ.ஆர்.ரஹ்மான் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இணையத்தில் செய்திகள் உலா வரும் நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மான் தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " நீங்கள் மனிதனாக உணராத ஒருவரை சில நேரங்களில் வெறுக்கக் கூடும். நானும் ஏற்ற தாழ்வுகளை எதிர்கொண்டேன்.
ஒவ்வொருவருக்கு ஒரு சிறந்த குணம் இருக்கும். எனக்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து இவ்வளவு அன்பும், ஆசீர்வாதமும் கிடைப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்று கூறியுள்ளார்.

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
