வாகனத்தில் விழுந்து தற்கொலை செய்ய முயற்சி!.. நடிகர் அப்பாஸ் உருக்கமான பேட்டி
அப்பாஸ்
90ஸ் காலகட்டத்தில் சாக்லட் பாய்யாக வலம் வந்தவர் தான் அப்பாஸ். இவர் 1996 -ம் ஆண்டு வெளியான காதல் தேசம் என்ற படத்தின் ஹீரோவாக நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
முதல் படத்திலேயே புகழ் உச்சிக்கு சென்ற அப்பாஸ், இதன் பின்னர் பல வெற்றி படங்களை கொடுத்து டாப் நடிகராக மாறினார்.
தற்கொலை முயற்சி
சமீபத்தில் பேட்டி ஒன்றில் அப்பாஸ் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், நான் 10 -ம் வகுப்பில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்ய நினைத்தேன். ஒரு கட்டத்தில் என் காதலி பிரேக் அப் செய்துவிட்டார்.
அப்போது செல்லும் வாகனத்தில் விழுந்து தற்கொலை நினைத்து இருக்கிறேன். ஆனால் அப்படி செய்தால் வாகனத்தை ஓட்டி வருபவரை பாதிக்கும் என்பதால் அப்படி செய்யவில்லை.
முதல் படம் ஹிட்டான பிறகு சில படங்கள் தோல்விகளையும் சந்தித்ததால் பொருளாதார ரீதியாக பிரச்சனைகளை சந்தித்தேன்.
தொடர் தோல்வியால் நடிப்பின் மீது வெறுப்பு வந்தது, இந்த ஒரு காரணத்தால் நான் குடும்பத்துடன் நியூசிலாந்துக்கு சென்றுவிட்டேன் என்று கூறியுள்ளார்.
சிறுவயதில் விஜய்யுடன் இருக்கும் இந்த சிறுவயது பிரபலம் யார் தெரியுமா?- அட இவரா இது?

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

அஜித் குமார் இறந்ததை நினைச்சு நானும், அம்மாவும் தினமும் அழுவுறோம் - ஆடியோ வெளியிட்ட நிகிதா IBC Tamilnadu
