மலேசியாவில் தமிழ் திரைப்படங்களுக்கு பெரிய மார்க்கெட் உருவாக காரணமே கமல் தான் ! 30 வருடங்களுக்கு முன் நடந்த விஷயம்..
அப்போதே கமல் திரைப்படம் செய்த சாதனை
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்திருக்கிறது.
தமிழகத்தை தாண்டி மற்ற இடங்களிலும் விக்ரம் திரைப்படம் பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருவதை பார்த்து வருகிறோம். அதன்படி விக்ரம் திரைப்படம் தற்போது வரை உலகளவில் ரூ. 320 கோடிக்கு மேல் வசூலை குவித்து இருக்கிறது.
இந்நிலையில் விக்ரம் திரைப்படம் குறித்தும் நடிகர் கமல் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை தயாரிப்பாளர் KR சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். அதன்படி 30 வருடங்களுக்கு முன்பே கமல் திரைப்படம் உலக மார்க்கேட்டில் சாதனை படைத்தது குறித்து பேசியுள்ளார்.
அதில் 1989 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ சகோதர்கள் திரைப்படம் தான் மலேசியாவில் பெரிய வசூல் சாதனை படைத்தது என்றும், முடியிருந்த திரையரங்குகள் அனைத்தும் இப்படத்திற்காக திறக்கப்பட்டது எனவும் பேசியுள்ளார்.
மேலும் தமிழ் சினிமாவுக்கு மலேசியாவில் பெரிய மார்க்கெட்டை உருவாக்கி தந்ததே அபூர்வ சகோதரர்கள் திரைப்படம் தான் எனவும் பேசியுள்ளார் கே.அர்.
10 நாட்களில் விக்ரம் திரைப்படம் செய்த பிரம்மாண்ட வசூல் ! UAE-ல் மட்டும் இத்தனை கோடியா?