அப்பா இறந்த போது ரசிகர்கள் செய்த மோசமான செயல்.. நடிகர் ப்ருத்விராஜ் வருத்தம்
ப்ருத்விராஜ்
மலையாள நடிகராக இருந்தாலும் தமிழில் சிறந்த படங்களில் நடித்து இங்கேயும் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றிருப்பவர் நடிகர் ப்ருத்விராஜ். இவரது நடிப்பில் கடைசியாக ஆடுஜீவிதம் என்ற படம் வெளியாக அவரது நடிப்பிற்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்தார்கள்.
நடிப்பு மட்டுமின்றி தற்போது இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’ திரைப்படம் மார்ச் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
மோசமான செயல்
இந்நிலையில், புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் ப்ருத்விராஜ் தனது தந்தை இறப்பின்போது ரசிகர்கள் செய்த செயல் குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " ஒரு பிரபலம் இறந்து போனால் அந்த பிரபலத்திற்கு மக்கள் அஞ்சலி செலுத்த அவரது உடலை பொது வெளியில் வைப்பார்கள். அது போன்று எனது அப்பாவின் உடலையும் வைத்திருந்தோம்.
அப்போது மோகன் லால் அங்கு வந்தார். அதை பார்த்ததும் அவரின் ரசிகர்கள் அவரை கொண்டாடும் விதமாக கைதட்டி ஆர்ப்பரித்தார்கள். அதை கண்டு எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது" என்று கூறியுள்ளார்.

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
