மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் அஜித் குமார் டிஸ்சார்ஜ்.. தற்போதைய நிலை!
அஜித் குமார்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தனர்.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சில தினங்களுக்கு முன், அஜித்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் குடியரசுத் தலைவரால் விருது வழங்கப்பட்டது.
தற்போதைய நிலை!
விருது வாங்கிய அஜித் சென்னை திரும்பிய நிலையில், அஜித்தை நேற்று கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.
தனது உடல்நல பரிசோதனைக்காக அஜித் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் தள்ளியது, இந்நிலையில், தற்போது அஜித் குமார் சிகிச்சை முடிந்து நலமுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
