ஆர்யாவின் மொத்த சொத்து மதிப்பு.. வீடு, கார் என முழு விவரம்
நடிகர் ஆர்யா 2005ல் அறிந்தும் அறியாமலும் படம் மூலமாக நடிகராக அறிமுகம் ஆனவர். அதற்கு பிறகு அவர் உள்ளம் கேட்குமே, நான் கடவுள், பாஸ் என்கிற பாஸ்கரன், மதராசபட்டினம், சார்பட்டா பரம்பரை என பல குறிப்பிடத்தக்க படங்களில் நடித்து இருக்கிறார்.
கடந்த வருடம் அவர் நடிப்பில் கேப்டன் படம் ரிலீஸ் ஆனது. ஆனால் அதற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
சொத்து மதிப்பு
நடிகர் ஆர்யா நடிப்பது மட்டுமின்றி ஹோட்டல் தொழிலும் செய்து வருகிறார். அவருக்கு சொந்தமாக Sea Shell, Zaitoon ஆகிய ஹோட்டல்கள் இருக்கிறது. அரேபியன் டிஷ்கள் ஸ்பெஷலான அந்த ஹோட்டல்களை கடந்த 45 வருடங்களாக ஆர்யா குடும்பம் நடத்தி வருகிறது.
ஆர்யாவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 80 கோடி ரூபாய். ஆர்யாவின் மனைவி சாயிஷாவும் நடிகையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
வீடு
ஆர்யா வீட்டின் புகைபடங்கள் பல வருடங்களுக்கு முன்பே வெளியாகி இருக்கிறது. அதன் புகைப்படங்கள் இதோ..
கார்கள்
நடிகர் ஆர்யா பல சொகுசு கார்களை வைத்திருக்கிறார். அவரது Audi Q7 கார் சுமார் 1 கோடி ருபாய் விலை கொண்டது. மேலும் Benz E Class காரின் விலை சுமார் 70 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
உச்சத்தில் இருக்கும் விஜய் சேதுபதி.. தற்போது மொத்த சொத்து மதிப்பு இவ்வளவா?