பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் மனைவி மரணம்! 7 மாதம் கோமாவில் இருந்தாரா.. அதிர்ச்சி தகவல்
சின்னத்திரை நடிகர் பரத் கல்யாணின் மனைவி ப்ரியதர்ஷினி இன்று மரணமடைந்தார் என்கிற செய்தி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பரத் கல்யாண்
சின்னத்திரை ரசிகர்களுக்கு அதிகம் பரிச்சயமானவர் பரத் கல்யாண். அவர் பல வருடங்களாக சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
தற்போது பாரதி கண்ணம்மா தொடரிலும் அவர் ஒரு சின்ன ரோலில் நடித்து வருகிறார். பாரதி மற்றும் கண்ணம்மா பணியாற்றும் ஹாஸ்பிடல் ஒனராக அவர் நடித்து வருகிறார்.
மனைவி மரணம்
பரத் கல்யாணின் மனைவி கடந்த 7 மாதங்களாக கோமாவில் இருந்த நிலையில் இன்று அவர் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார் என தகவல் வந்திருக்கிறது.
அவர்களுக்கு தருண் என்ற மகனும், நிகிதா என்கிற மகளும் இருக்கிறார்கள். பிரியதர்ஷினி பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் HR ஆக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பரத் கல்யாணுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
Also Read: ஹன்சிகாவின் வருங்கால கணவர் இவர்தான்! போட்டோவுடன் இதோ.. டிசம்பர் 4ம் தேதி திருமணம்