சொகுசு கார்கள், சொந்தமாக தனி விமானம் வைத்திருக்கும் ஜுனியர் என்.டி.ஆர் சொத்து மதிப்பு... இத்தனை கோடியா?
ஜுனியர் என்.டி.ஆர்
ஜுனியர் என்.டி.ஆர், தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வருபவர்.
இவர் கடந்த 2001ம் ஆண்டு ராஜமௌலி இயக்கிய ஸ்டூடண்ட் நம்பர் 1 திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
பின் அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்ற ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ரசிகர்களின் பேராதரவை பெற்றார்.
கடைசியாக இவரது நடிப்பில் தேவாரா என்ற படம் வெளியானது, படம் பெரிய அளவில் ஹிட் இல்லை என்றாலும் ஓரளவிற்கு ஓடியது.
தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வர ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன் உடன் இணைந்து வார் 2 திரைப்படத்தில் நடிக்கிறார்.
சொத்து மதிப்பு
சமீபத்தில் என்.டி.ஆர் உடல் எடையை குறைத்து ஆளே மாறியிருந்த புகைப்படங்கள் வெளியாகி செம வைரலானது. இந்த நிலையில் ஜுனியர் என்.டி.ஆர் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது சொத்து மதிப்பு விவரம் வலம் வருகிறது.
சினிமா மட்டுமின்றி விளம்பரங்கள் மூலமாகவும் கோடி கோடியாய் சம்பாதிக்கும் ஜுனியர் என்.டி.ஆரின் சொத்து மதிப்பு ரூ. 450 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
சொந்தமாக ஐதராபாத்தில் சொகுசு வீடு, சொந்தமாக பிரைவேட் ஜெட் வைத்துள்ளார்.
அவரிடம் லம்போகினி உருஸ், போர்ஸே 718 கேமேன், மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.எஸ், ரேஞ்சு ரோவர், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், மெர்சிடிஸ் மே பேச் போன்ற சொகுசு கார்களும் உள்ளன.

எங்கள் பிரிவுக்கு அந்த நபர் மட்டுமே காரணம்; இது திட்டமிட்ட சதி - அதிர்ச்சி கொடுத்த ஆர்த்தி IBC Tamilnadu

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
