ஜூனியர் என்.டி.ஆர் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

Kathick
in பிரபலங்கள்Report this article
ஜூனியர் என்.டி.ஆர்
தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய அளவில் பல லட்சம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் ஜூனியர் என்.டி.ஆர்.
இவர் பிரபல முன்னணி இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் 2001ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்டுடென்ட் நம்பர் 1 படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதன்பின் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.
நடனத்தில் தனக்கென்று தனி பாணியை கொண்டுள்ளார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஆர்.ஆர்.ஆர் மாபெரும் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து தற்போது தேவரா எனும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் அடுத்ததாக கேஜிஎப் பட இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
சொத்து மதிப்பு
இந்த நிலையில், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி. இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 450 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.
மேலும் இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 60 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.
வார் 2 படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிற்கு செல்லும் ஜூனியர் என்.டி.ஆர், அப்படத்தில் நடிக்க ரூ. 50 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது.

எதிர்பாரா பேரழிவு; மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு - 3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் IBC Tamilnadu
