அதுமட்டும் நடக்கலான தற்கொலை பண்ணியிருப்பேன்.. நடிகர் லிவிங்ஸ்டன் ஓபன் டாக்
வில்லன், ஹீரோ, காமெடியன் என்று அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்து மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர் தான் நடிகர் லிவிங்ஸ்டன்.
இவர் நடிகர் மற்றுமின்றி சில படங்களில் திரைக்கதையும் எழுதியுள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் வில்லனாக நடித்து வந்த லிவிங்ஸ்டன், சுந்தர புருஷன், சொல்லாமலே, என் புருஷன் குழந்தை மாதிரி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து ஹிட் கொடுத்தார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற லிவிங்ஸ்டன் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், நான் பாக்யராஜிடம் இயக்குனராக சேருவதற்காக அவர் வீட்டின் முன்பு தினமும் இருப்பேன். ஒரு நாள் அவர், "உதவி இயக்குனராக சேர வேண்டும் என்றால் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்" என்று கூறினார்.
நானும் சொன்னது போல் காத்திருந்தேன். ஒரு கட்டத்தில் எனக்கும் அப்பாவுக்கும் சண்டை வந்துவிட்டது.
அப்போதான் கடைசியா பாக்கியராஜ் சாரிடம் வாய்ப்பு கேட்கலாம், அவர் இல்லை என்று மறுத்தாள் தற்கொலை செய்து கொள்ளலாம் என எண்ணத்தோடு அவரை சந்தித்து பேசினேன். பாக்யராஜ் சார் உடனடியாக உதவி இயக்குனராக சேர்த்து கொண்டார் என்று லிவிங்ஸ்டன் கூறியுள்ளார்.
இந்த புகைப்படத்தில் இருப்பவர் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்.. யாருனு கண்டுபிடிங்க பாக்கலாம்