குழந்தையாக இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் தெரியுமா.. பல கோடி சொத்துக்கு சொந்தக்காரர்
சினிமா நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படம் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், தற்போது ஒரு முன்னணி நடிகரின் குழந்தை காலத்து புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.
இவர் ஹிந்தி சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். தற்போது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'சிக்கந்தர்' என்ற படத்தில் நடித்து கொண்டு வருகிறார்.
அட இவரா
நடிகராக மட்டுமின்றி தயரிப்பாளர், பாடகர் மற்றும் எழுத்தாளர் என பல்வேறு துறையில் பணியாற்றி உள்ளார். அவர் வேறு யாருமில்லை ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி கொண்டிருக்கும் நடிகர் சல்மான் கான் தான்.
ஒரு படத்தில் நடிக்க பல கோடி வரை சம்பளம் வாங்கும் இவருக்கு ரூ. 2900 கோடி வரை சொத்து உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், Panvel பகுதியில் அவருக்கு 150 ஏக்கர் பண்ணை நிலமும் அதில் சொகுசு பண்ணை வீடும் இருக்கிறது.
துபாயில் புர்ஜ் கலீபா அருகில் ஒரு அபார்ட்மெண்ட், பீச் ஹவுஸ் என பல சொத்துகள் அவருக்கு இருக்கிறது. மேலும், சொந்தமாக மும்பையில் கேலக்சி அபார்ட்மெண்டில் இருக்கும் triplex அபார்ட்மெண்ட் ஒன்றையும் வைத்துள்ளார்.
அது சுமார் 100 கோடி மதிப்பு கொண்டது என கூறப்படுகிறது. தற்போது, சல்மான் கானின் சிறு வயது புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
