கடைசி வரை நிறைவேறாத சரத் பாபுவின் ஆசை!.. என்ன தெரியுமா அது?
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் சரத் பாபு. இவர் தெலுங்கில் 1973 -ம் ஆண்டு வெளியான ராம ராஜ்ஜியம் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
இதையடுத்து தமிழ், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் உடல்நல குறைவாக இருந்து வந்த சரத் பாபு சிகிச்சை பலனின்றி நேற்று(22-05-2023) காலமானார். இவரின் மறைவு ரசிகர் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சரத் பாபுவின் ஆசை
நடிகர் சரத்பாபுவின் அப்பா ஹோட்டல் தொழிலதிபராக இருந்துள்ளார். சரத் பாபுவிற்கு அப்பாவின் ஹோட்டல் தொழிலை தொடர விருப்பமில்லையாம். அவருக்கு போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பது தான் ஆசையாம்.
ஆனால் சரத் பாபுவிற்கு கிட்டப்பார்வை பிரச்சனை இருந்துள்ளதாம் அதனால் அவரது ஆசை நிறைவேறாமல் போனதாம். இதன் பின்னர் சரத் பாபுவிற்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாம்.
சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான ஃபர்ஹானா படத்தின் வசூல் எவ்ளோ தெரியுமா? இதோ முழு விவரம்

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
