இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் சித்தார்த் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா?
சித்தார்த்
சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் நடிகராக இருந்து வருபவர் சித்தார்த். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ள இவர் ஆங்கிலத்தில் ஒரு படம் நடித்துள்ளார்.
கதையாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் பாடகராகவும் இருந்துள்ளார். சித்தார்த் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த இந்தியன் 2 படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். ஆனால் அப்படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் வசூலில் தோல்வி அடைந்தது.
படங்களில் நடிப்பதை தாண்டி நாட்டில் நடக்கும் விஷயங்கள் குறித்து தனது கருத்தை தைரியமாக பதிவு செய்யக்கூடியவர் சித்தார்த், அதனால் பல பிரச்சனைகளையும் சந்தித்திருக்கிறார்.
இத்தனை கோடியா?
இந்நிலையில், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் சித்தார்த்தின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, சித்தார்த்துக்கு மொத்தமாக ரூ. 70 கோடி வரை சொத்து இருக்கும் என கூறப்படுகிறது. ஹைதராபாத்தில் Shree Rath Apartmentsல் ஒரு வீடு மற்றும் சென்னையில் ஒரு வீடும் உள்ளது.