புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நடிகர் சூர்யா.. வெளிவர உள்ள மாஸ் படங்கள்!
சூர்யா
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மிரட்டலாக உருவாகியுள்ள திரைப்படம் கருப்பு. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர்.
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து த்ரிஷா, ஸ்வாசிகா ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் கருப்பு படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வீடியோ வெளிவந்தது.
சும்மா மிரட்டலாக அமைந்திருந்த இந்த டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
மாஸ் படங்கள்!
ஏற்கனவே நடிகர் சூர்யா ‘எண்டர்டெயின்ட்மெண்ட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில், தற்போது 'ழகரம்’ என்ற இரண்டாவது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
இந்த நிறுவனத்தின் முதல் படமாக ஜித்து மாதவனின் படமும், இரண்டாவது படமாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் படமும் இருக்கும் என்று கூறப்படுகிறது.