2024ல் பாராளுமன்றம், 2028ல் சட்டமன்றம்.. பரபரப்பு கிளப்பும் விஜய் போஸ்டர்!
தமிழ் சினிமாவின் டாப் நடிகராக இருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் விறுவிறுப்பாக லியோ படம் உருவாகி வருகிறது.
இதையடுத்து விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியில் நடிக்க போவதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை.
சமீபகாலமாக விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் வருகின்ற ஜூன் 22-ம் தேதி விஜய்க்கு பிறந்தநாள் முன்னிட்டு மதுரை விஜய் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து போஸ்டர் அடித்துள்ளனர்.
அதில் "2024 பாராளுமன்றமே, 2026 தமிழக சட்டமன்றமே" என்று குறிப்பிட்டுள்ளனர். தற்போது இந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதோ போஸ்டர்.
பருத்திவீரன் பட நடிகர் உயிரிழப்பு.. திரையுலகினர் இரங்கல்!