பல கோடி ஏமாத்திட்டாங்க.. விவேகம் பட வில்லன் போலீசில் புகார்

By Parthiban.A Jul 22, 2023 10:50 AM GMT
Report

நடிகர் விவேக் ஓபராய் ஹிந்தி சினிமாவில் பிரபலமானவர். ஆவர் தமிழில் விவேகம் படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். அஜித்தின் நண்பராக இருந்து அதன் பின் வில்லனாக மாறும் ரோலில் அவர் நடித்து இருந்தார்.

அந்த படத்திற்கு பிறகு விவேக் ஓபராய்க்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படவாய்ப்புகள் வந்ததால் அதில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் விவேக் ஓபராய் மும்பை போலீசில் ஒரு புகார் அளித்து இருக்கிறார். தான் நடத்தி வரும் நிறுவனத்தின் பிஸ்னஸ் பார்ட்னர்கள் தன்னை 1.5 கோடி ருபாய் அளவுக்கு ஏமாற்றிவிட்டார்கள் என புகார் தெரிவித்து இருக்கிறார்.

பல கோடி ஏமாத்திட்டாங்க.. விவேகம் பட வில்லன் போலீசில் புகார் | Actor Vivek Oberoi Cheated Crores By Partners

மோசடி

2017ல் Oberoi Organics என்ற பெயரில் விவேக் ஓபராய் நிறுவனம் தொடங்கி இருக்கிறார். ஆனால் அந்த நிறுவனத்தில் லாபம் இல்லை என்பதால் அதற்கு ஈவென்ட் ஆர்கனைசிங் தொழில் செய்து வரும் சஞ்சய் சாஹா, அவரது அம்மா நந்திதா சாஹா மற்றும் ராதிகா நந்தா ஆகியோரை பார்ட்னர்களாக கொண்டு வந்திருக்கிறார்.

அந்த நிறுவனத்தை மூடிவிட்டு அவர்கள் எல்லோரும் சேர்ந்து Anandita Entertainment என்ற பெயரில் பட தயாரிப்பு மற்றும் event organising நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கின்றனர்.

பல கோடி ஏமாத்திட்டாங்க.. விவேகம் பட வில்லன் போலீசில் புகார் | Actor Vivek Oberoi Cheated Crores By Partners

அந்த நிறுவனத்தின் பணிகள் அனைத்தையும் விவேக் ஓபராயின் பார்ட்னர்கள் தான் கவனித்து வந்திருக்கின்றனர். அவர்கள் மோசடியாக பணத்தை சொந்த விஷயங்களுக்கு பயன்படுத்தி ஏமாற்றி இருப்பது ஒருகட்டத்தில் ஓபராய்க்கு தெரியவந்திருக்கிறது.

அதிகம் லாபம் வரும் என முதலீடு செய்ய வைத்து, அந்த பணத்தை அவர்கள் சொந்த செலவுக்கு பயன்படுத்தி ஏமாற்றிவிட்டதாக தற்போது விவேக் ஓபராய் போலீசில் புகார் அளித்து இருக்கிறார். தற்போது போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Also Read: பச்சோந்தி இனியா.. பாக்கியலட்சுமி புது ப்ரோமோ பார்த்து வெச்சி செய்யும் நெட்டிசன்கள்


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US