பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ் - என்ன சொன்னார் தெரியுமா?
பிக் பாஸ் 6 சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஜனனி மற்றும் தனலட்சுமி வீட்டில் இருந்து வெளியேறினார்கள். இந்த சீசன் இறுதி கட்டத்தை நெருங்கியதால் போட்டியாளர்கள் அனைவரும் டாஸ்கில் சிறப்பாக பங்கெடுத்து வருகின்றனர்.
freeze டாஸ்
இந்த வாரத்தில் freeze டாஸ்கில் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தருகிறார்கள். நேற்று மைனா நந்தினி, ஷிவன், அமுதவாணன் ஆகியோரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வருகை தந்தார்கள். இன்று காலையில் வெளிவந்த முதல் ப்ரோமோவில் ரட்சித்தாவின் பெற்றோர்கள் வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில் இரண்டாவது ப்ரோமோவில் மணிகண்டனின் சகோதரியான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிக் பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அட்வைஸ்
போட்டியாளர்களிடம் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் " இந்த சீசன் சூப்பர் ஹிட் ஆகிவுள்ளது. இனி வரும் நாட்களில் டாஸ்கில் நன்றாக விளையாடுங்கள் .என்ன சண்டை போட்டாலும் ஒன்றாக அமர்ந்து உண்ணுங்கள்" என அட்வைஸ் கொடுத்துள்ளார்.
தன்னை பற்றி தவறாக எழுதியவரின் உயிரை காப்பாற்றிய அஜித்.. இப்படியொரு மனிதரா