நடிகை ஆல்யா மானசாவின் புதிய சீரியல் அப்டேட்- எந்த தொலைக்காட்சியில் தெரியுமா?
நடிகை ஆல்யா
தமிழ் சின்னத்திரையில் டாப் நாயகியாக இருக்கும் ஒரு நடிகை. ராஜா ராணி என்ற தொடர் மூலம் விஜய் தொலைக்காட்சியில் நாயகியாக அறிமுகமான இவர் முதல் தொடரிலேயே பெரிய அளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றார்.
அப்போது அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வட்டாரம் உருவாகினார்கள். அந்த தொடரில் அவருடன் நடித்த சஞ்சீவுடன் காதல் ஏற்பட பின் திருமணமும் செய்துகொண்டார்.
காதல் திருமணம் செய்த இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இரண்டாவது தொடரில் கமிட்டாகி இருந்த ஆல்யா கர்ப்பமாக இருந்ததால் தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார்.

புதிய தொடர்
கடந்த சில மாதங்களுக்கு முன்பே தான் புதிய தொடரில் கமிட்டாகி இருப்பதாக தெரிவித்தாரே தவிர எந்த தொலைக்காட்சி என்ன தொடர் என கூறவில்லை. தற்போது புதிய சீரியலுக்கான படப்பிடிப்பை ஆல்யா மானசா தொடங்கியுள்ளார்.
சரிகம புரொடக்ஷன்ஸ் தயாரிக்க சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடரில் தான் நடிக்கிறாராம்.
மிகவும் சிம்பிளாக தயாரிக்கப்பட்ட கௌதம் கார்த்திக், மஞ்சிமா திருமண பத்திரிக்கை- இதோ பாருங்க
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan