ஷாருக்கானின் ஜவான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க தீபிகா படுகோனே வாங்கிய சம்பளம்- நயன்தாராவை விட அதிகமா?

Yathrika
in திரைப்படம்Report this article
ஜவான் திரைப்படம்
பாலிவுட்டின் King Khan ஷாருக்கான் நடிப்பில் பதான் படத்திற்கு பிறகு தயாராகி வரும் திரைப்படம் ஜவான். அட்லீ இந்த படத்தின் மூலம் பாலிவுட்டிலும் இயக்குனராக அறிமுகமாகிறார்.
முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகிவரும் இப்படத்தில் நடிகை நயன்தாரா நாயகியாக நடிக்க வரும் செப்டம்பர் மாதம் படம் ரிலீஸ் என்கின்றனர்.
ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனம் தயாரித்துள்ளது.
தீபிகாவின் சம்பளம்
ஷாருக்கான்-நயன்தாரா முக்கிய ஜோடிகளாக நடிக்க விஜய் சேதுபதி படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அதேபோல் பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்துவரும் தீபிகா படுகோனே படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருக்கிறார்.
இப்பட நாயகி நயன்தாரா ரூ. 11 கோடி சம்பளம் வாங்கியுள்ள நிலையில் தீபிகா படுகோனே ரூ. 17 முதல் 20 கோடி வரை சம்பளம் வாங்கி இருக்கிறாராம்.
அதேபோல் விஜய் சேதுபதி இப்படத்தில் வில்லனாக நடிக்க ரூ. 21 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
குழந்தை பிறந்த பிறகு உடல் எடையை குறைக்க சீரியல் நடிகை நீலிமா ராணி என்ன சாப்பிட்டார் தெரியுமா?