கிலோ கணக்கில் தங்கம் வைத்திருக்கும் நடிகை குஷ்பு! மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
90களில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் குஷ்பு. அவர் உச்சத்தில் இருந்தபோது அவருக்கு ரசிகர்கள் கோவில் கட்டி வழிபட்டார்கள். அந்த அளவுக்கு ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.
குஷ்பு இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தற்போது இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
முழுநேர அரசியலில் குஷ்பு களமிறங்கி இருந்தாலும் அவ்வப்போது படங்களில் குணச்சித்திர ரோல்களில் நடித்து வருகிறார்.
வீடு
குஷ்பு மற்றும் சுந்தர்.சி ஆகியோருக்கு சென்னையில் சொந்தமாக பிரம்மாண்ட வீடு இருக்கிறது. Avni என்ற அவர்களது பட தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் தான் வீட்டிற்கும் வைத்து இருக்கின்றனர்.
குஷ்பு வீட்டின் புகைப்படங்கள் இதோ..
சொத்து மதிப்பு
நடிகை குஷ்பு கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். அதில் அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் மொத்த சொத்து மதிப்பையும் குறிப்பிட்டு இருந்தார்.
அதில் தன்னிடம் 8.55 கிலோ தங்கம், 78 கிலோ வெள்ளி இருப்பதாக கூறி இருந்தார். மேலும் பல சொகுசு கார்களின் மதிப்பையும் சேர்ந்து அவரிடம் 4.55 கோடிக்கு அசையும் சொத்துக்கள் இருக்கிறதாம்.
தங்கம் விலை இத்தனை வருடங்களில் ஏறி இருப்பதை கணக்கிட்டால் தற்போது இதனை மதிப்பு சுமார் 7 கோடி ரூபாய்க்கும் மேல் வரும்.
அது மட்டுமின்றி 18 கோடிக்கு அசையா சொத்துக்கள் இருக்கிறதாம். ஆக மொத்தம் குஷ்புவின் மொத்த சொத்து மதிப்பு தற்போது 25 முதல் 28 கோடி ரூபாய் வரும் என கூறப்படுகிறது. இதில் சுந்தர்.சியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri
