குஷ்புவை ஐட்டம் பாடல் ஆட கேட்டிருப்பாரோ... மோசமான கமெண்ட்டுக்கு நடிகை பதிலடி
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் அடையாளமாக ஏன் இந்திய சினிமா கொண்டாடும் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த்.
மொழி கடந்து ரஜினி படங்கள் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டுள்ளது. இவரது நடிப்பில் கடைசியாக கூலி திரைப்படம் வெளியாகி இருந்தது, இந்த படமும் செம வசூல் வேட்டை செய்தது.
அப்படத்தை முடித்த கையோடு ரஜினி ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார், படத்திற்கான வேலைகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நடிகை பதிலடி
சமீபத்தில் தமிழ் சினிமா எதிர்ப்பார்க்காத ஒரு அறிவிப்பு வந்தது.
மூன்று முடிச்சு சீரியல் நடிகை ஸ்வாதி இதுவரை இத்தனை படங்கள் நடித்துள்ளாரா?... யாருக்கெல்லாம் தெரியும்
அதாவது கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க ரஜினி நடிக்க சுந்தர்.சி இயக்கப்போகும் படம் குறித்த அறிவிப்பு வெளியாக படத்தின் மேல் ரசிகர்கள் ஆர்வம் காட்டினார்கள்.

ஆனால் திடீரென சுந்தர்.சி படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த தகவல் வந்ததும் டுவிட்டரில் ஒருவர், ஐட்டம் பாடலுக்கு குஷ்புவுடன் ஆடலாம் என கேட்டிருப்பாரோ என்று கமெண்ட் போட்டுள்ளார்.
அதற்கு குஷ்பு, இல்லை உங்கள் வீட்டில் இருந்து யாரையாவது ஆட வைக்கலாம்னு நினைத்தோம் என தரமான பதிலடி கொடுத்துள்ளார்.
Ile, unga veetule irundhu yaaravadhu aaduvaikkalamnu nenacho.
— KhushbuSundar (@khushsundar) November 14, 2025