ரசிகர்களின் கனவுக் கன்னி, கணவரால் அடித்து துன்புறுத்தப்பட்ட அந்த பிரபல நடிகை.. யார் தெரியுமா?
சினிமாவில் ஜொலிக்கும் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. அவர்கள் பொதுவெளியில் செல்லும்போது தான் மக்களுக்கு அவர்கள் எதிர் கொள்ளும் சிரமங்கள் குறித்து புரியும்.
யார் தெரியுமா?
அந்த வகையில் ரஜினி, கமல், அமிதாப் பச்சன் ஆகியோருடன் நடித்த ரசிகர்களின் கனவுக் கன்னி நடிகை ரதி அக்னிஹோத்ரி வாழ்வில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து பார்ப்போம்.
இவர் பாக்யராஜ் நடிப்பில் வெளியான ‘புதிய வார்ப்புகள்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
கமல், ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த ரதி கரியரின் உச்சத்தில் இருந்தபோது தொழிலதிபர் அனில் விர்வானி என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார் ரதி.
ஆனால், திருமணமான முதல் ஆண்டிலேயே குடும்ப வன்முறையை எதிர்கொண்டார். கணவர் தன்னை அடிப்பதாகவும், தன்னை காப்பாற்றுமாறு வீட்டை சுற்றி ஓடியதையும் பேட்டி ஒன்றில் ரதியே கூறியிருக்கிறார். பின் ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.