மௌன ராகம் படத்தின் 2ம் பாகமா? சுவாரஸ்யமான தகவலை கூறிய நடிகை ரேவதி
மௌன ராகம்
மௌன ராகம் திரைப்படம் 1986ல் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்தது. இப்படத்தில் மோகன், ரேவதி, கார்த்திக், வி.கே.ராமசாமி, காஞ்சனா, சோனியா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
விமர்சன ரீதியாக மட்டுமின்றி பாக்ஸ் ஆபீஸிலும் ஹிட் ஆனது. சுதந்திர தினத்தன்று வெளிவந்த இப்படம் 175 நாட்களுக்கு மேல் ஓடி, இயக்குனர் மணிரத்னம் திரைப்பட வாழ்விற்கு திருப்புமுனையாக அமைந்தது.
சிறந்த திரைப்படம் என்ற விருதை பெற்று மேலும், இப்படத்திற்காக மணிரத்னம் அவர்கள் சிறந்த இயக்குனர் விருதை பெற்றார். படத்தின் வெற்றியின் காரணமாக தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் மௌனராகம் திரைப்படம் ரீமேக் செய்து வெளியானது.
ரேவதி பேட்டி
இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகி நம்முடைய சினிஉலகம் Youtube சேனலில் அளித்துள்ள பேட்டியில் மௌன ராகம் படம் குறித்து சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
மௌனராகம் திரைப்படம் தனது வாழ்வை மாற்றியதாகவும் மேலும், மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த அஞ்சலி திரைப்படம் மௌனராகம் 2ம் பாகமாக வெளியிட திட்டமிட்டதையும் குறித்து பேசினார்.
அவர் கூறியதாவது :
" 1990இல் அஞ்சலி திரைப்படம் வெளிவந்து பல விருதுகளை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. இப்படம் குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. ரேவதி, ரகுவரன், பிரபு போன்ற பலர் நடித்துள்ளனர். மௌன ராகம் படத்தின் தொடர்ச்சியாக "மௌனராகம் 2" எடுக்க திட்டமிட்டிருந்த நிலையில் நடிகர் மோகன் திரைப்படத்தில் நடிக்க மறுத்துள்ளார். இதன் காரணமாக மோகனுக்கு பதிலாக ரகுவரன் படத்தில் நடித்துள்ளார். அதனால் படத்திற்கு "அஞ்சலி" என பெயரிட்டு வெளியிட்டனர். புகழ்பெற்ற இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 2 படங்களும் பெரும் வெற்றியை அளித்து, அது தனது திரையுலக வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது" என ரேவதி தெரிவித்துள்ளார்.
சிம்புவுடன் நடிக்க தீபிகா படுகோன் கேட்ட சம்பளம் மட்டும் இத்தனை கோடியா!