சிம்புவுடன் நடிக்க தீபிகா படுகோன் கேட்ட சம்பளம் மட்டும் இத்தனை கோடியா!
சிம்பு - ராஜ்கமல் - தேசிங் பெரியசாமி
சிம்பு அடுத்ததாக தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது.
சமீபத்தில் தான் இப்படத்தின் அறிவிப்பு வெளிவந்த நிலையில், அடுத்தடுத்து அப்டேட் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இப்படத்திற்காக லண்டன் சென்று பயிற்சி கூட எடுத்து வருகிறாராம் சிம்பு.
மேலும் இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிக்க பிரபல முன்னணி பாலிவுட் ஹீரோயின் தீபிகா படுகோனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளிவந்தது.
தீபிகா படுகோன் நடிப்பாரா
ஆனால், கண்டிப்பாக இந்த படத்தில் தீபிகா நடிக்க வாய்ப்பில்லை என கூறுகின்றனர். ஏனென்றால், இப்படத்தில் நடிக்க வேண்டும் என்றால் நடிகை தீபிகா படுகோனுக்கு ரூ. 30 கோடி சம்பளம் கொடுக்க வேண்டுமாம்.
மேலும் அவர் படப்பிடிப்பிற்காக வரும் பொழுது 5 ஸ்டார் ஹோட்டலில் தங்குவாராம். அவருக்காக ஒரு ரூம் மட்டுமின்றி ஒரு Floor-ஐ மொத்தமாக புக் செய்ய வேண்டும் என கண்டிஷன் போடுவாராம். இதனால் கண்டிப்பாக தீபிகா இப்படத்தில் நடிப்பது கடினம் என கூறப்படுகிறது.
அரசியலுக்காக பணம் சேர்க்கும் விஜய்.. அவசர அவசரமாக செய்யும் விஷயம்

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
