தக் லைப் பட நிகழ்ச்சியில் ஆங்கிலத்தில் பேசச் சொன்ன தொகுப்பாளர்.. நேரடியாக மறுத்த நடிகை அபிராமி
அபிராமி
கேரளாவை பூர்வீகமாக கொண்ட அபிராமி கடந்த 1995ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கதாபுருஷன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
அதன்பின்,1999ம் ஆண்டு சுரேஷ் கோபி நடிப்பில் வெளியான பத்ரம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
கல்லூரியில் படிக்கும்போதே சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்து வந்த அபிராமிக்கு கடந்த 2004ம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கி, நடித்த விருமாண்டி படம் சினிமாவில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
அபிராமியின் செயல்
அதை தொடர்ந்து, தற்போது 'தக் லைப்' படத்திலும் கமலுடன் மீண்டும் சேர்ந்து நடித்துள்ளார். இந்நிலையில், தக் லைப் படக்குழுவினர் நேற்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
அங்கு ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தேசிய அளவிலான பத்திரிகையாளர்கள் இருந்தனர். அதனால், படக்குழு சார்பில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் மேடையில் இருந்தவர்களிடம் ஆங்கிலத்தில் பேசுமாறு கேட்டுக்கொண்டார்.
அப்போது நடிகை அபிராமி, சென்னையில் நடக்கும் விழாவில் தமிழில் பேசாமல் எப்படி, என தமிழில் மட்டுமே பேசியுள்ளார். தற்போது இவரின் இந்த தைரியமான செயலை பலர் பாராட்டி வருகின்றனர்.